விக்கினேஸ்வரனின் தெரிவு தோல்வியென்கிறார் சாம்!
கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தரோ வட மாகாண முதலமைச்சருடன் இணக்க போக்கிற்கு இறங்கிவர மறுபுறம் விக்கினேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் நிறுத்தும் தவறை செய்ய மாட்டோம் என நம்புவதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சரின் தற்போதைய நடத்தை குறித்து கேள்வி எழுப்பட்டுள்ளது.இதுவே எமது கட்சி எதிர்நோக்கும் பிரச்சினையாகும்.கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்ற போது பிள்ளையான் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் வழக்கு விசாரணையை எதிர்நோக்கியுள்ளவரான முன்னாள் ஆயுததாரியான பிள்ளையானை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முதலமைச்சர் ஆக்கினார்.
பிள்ளையானை முதலமைச்சர் ஆக்கிய பின்னர் மஹிந்த ராஜபக்ச உலகம் முழுவதும் சென்று, பிள்ளையான் போன்றவர்களுக்கு எவ்வாறு பொலிஸ் அதிகாரத்தை கொடுப்பது என கேட்டார்.பிள்ளையானை அவரே உருவாக்கிவிட்டு எவ்வாறு பிள்ளையானுக்கு பொலிஸ் அதிகாரத்தை கொடுப்பது என கேட்கின்றார்.நியாயமான கேள்வி.தற்போது பிள்ளையான் கொலைக் குற்றச்சாட்டு விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.
அதற்கு எமது பதிலாக தான் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கினோம்.அதன் பின்னர் அனைத்து அதிகாரங்களையும் அவருக்கு ஏன் வழங்க முடியாது என நாம் கேட்டோம்.துரதிஸஷ்டவசமாக அது தோல்வியில் முடிவடைந்த பரிசோதனையாக அமைந்துள்ளது.அதற்கான பிரதிபலனை நாம் அனுபவிக்கின்றோம்.அதுபோன்ற தவறை மீண்டும் ஒருதடவை செய்ய மாட்டோம் என நம்புகின்றேனென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment