பெப்ரல் அமைப்பு சபாநாயகருக்கு விடுத்துள்ள கோரிக்கை
அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கடிதம் ஒன்றின் ஊடாக சபாநாயகரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கையை ஒரு மாதத்துக்குள் நிறைவேற்ற நாடாளுமன்றம் தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம், பிரதமர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டமை ஊடாக குறித்த எல்லை நிர்ணயம், மீளாய்வுக்கு உட்படுத்தி நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில், குறித்த அறிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
இதேவேளை, கண்டி மாவட்டத்தின் பூஜாப்பிட்டிய தொகுதியை மாகாண சபை எல்லை நிர்ணத்தின்போது இரண்டு பகுதிகளாக பிரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பூஜாப்பிட்டிய பிரதேச சபையில் நேற்று ஏகமனதாக யோகனையொன்று நிறைவேற்றப்பட்டுப்பட்டுள்ளது
Post a Comment