Header Ads

test

கண்டியில் இருவர் அதிரடிப்படையால் சுட்டுக்கொலை



கண்டி, மடவளை பிரதேசத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று (09) பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் கும்பல் ஒன்றின் உறுப்பினர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பிரபல பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துரே மதூஷின் குற்ற நடவடிக்கைகளை செய்து வந்த இருவரே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments