Header Ads

test

மைத்திரியிடம் மூன்று இலட்சம்!


சிறுவர்களைப் பாதுகாப்போம் " தேசிய செயல்திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் கிளிநொச்சி மாநாட்டின் ஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம்  கையெழுத்துக்கள் மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களால் கையளிக்கப்பட்டது.

தாயை இழந்தும்,தந்தையைச் சிறையில் அடைக்கப்பட்டதாலும் அனாதரவாக்கப்பட்டு, உறவினரின் அனுசரணையில் வாழும்,இரு சிறுவர்களின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உத்தரவாதம் செய்யும் வகையில் அரசியல் கைதியான ,ஆனந்தசுதாகரன் ஜனாதிபதியின் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படவேண்டுமென வடக்குக் கிழக்கு,தெற்கு,மேற்கு என இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மற்றும் சமுக,அரசியல் அமைப்புக்கள் ஏராளமான கையெழுத்து;ப போராட்டங்களை நடாத்தியிருந்தன. அதனத் தொடர்ந்து ஆனந்தசுதாகரன் .கடந்த தமிழ்,சிங்கள புத்தாண்டளவில் விடுவி;ககப்படுவார் என்ற செய்தியும் ஜனாதிபதியிடம் இருந்து வெளிவந்தது.

எனினும் அவரது விடுதலையை உத்தரவாதப்படுத்த மேலும் வலியுறுத்தல்கள் தேவை என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வடமாகாணக் கல்வி அமைச்சின் அனுசரணை யுடன்,வடமாகாண கல்விச் சமூகமாகிய கல்விமான்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் இருந்து மூன்று இலட்சம் கையொப்பங்களைப் பெற்று ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்கும்படி வட மாகாணக் கல்வி அமைச்சரிடம் கையளித்திருந்தனர்.
இதனை நேரடியாக ஜனாதிபதியிடம் கையளிக்கும் பொருட்டு,அதற்கான நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கைகள் நினைவூட்டல்கள் அனுப்பிய போதும் அது கைகூடவில்லை.

எனினும் நேற்றயதினம் 18ஆம் திகதி ஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருகை தர இருப்பதாலும், "சிறுவர்களைப் பாதுகாப்போம்" என்ற தேசிய செயல்திட்டத்தை முன்னெடுக்கவே,வருகின்றார் என்பதாலும் இங்கு வைத்து மூன்று இலட்சம் கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய மனுக்களைக் கையளிப்பது பொரு;ததமாக இருக்கும் என்ற அடிப்படையில் வடமாகாண ஆளுநரின் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

நேற்று கிளிநொச்சியில் மேற்குறிப்பிட்ட நிகழ்வில் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய்ககோரி 3 லட்சம்  கையெழுத்துக்கள்  மாகாணக் கல்வி அமைச்சரினதும்,இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினரதும் கோரிக்கைக் கடிதங்களுடன்கூடிய மனு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி இவ்விடயததில் அக்கறையுடனேயே இருப்பதாகவும், அதனை நோக்கி தாம் செயற்பட்டு வருவதாகவும்,நம்பிக்கையை ஏற்படுத்தும் பதிலை வடமாகாணக் கல்வி அமைச்சரிடம் வழங்கியிருந்தார்.

No comments