Header Ads

test

மீனவர்கள் பற்றி தகவலில்லை!

கடந்த திங்களன்று 11ம் திகதி காணாமல் போயுள்ள மீனவர்கள் தொடர்பில் தகவல் இல்லாதுள்ளதாக கூறப்படுகின்றது.காங்கேசன்துறை கடலில் கடற்றொழிலுக்காக சென்ற தையிட்டி ஆவளை பகுதியை சேர்ந்த டேவிட் றேகன் (வயது 23) மற்றும் நல்லிணக்கபுரம் மாவட்டபுரம் பகுதியை சேர்ந்த இரத்தினசிங்கம் (வயது 65)  ஆகிய இருவரும் இதுவரை கரைதிரும்பவில்லை.

காணாமல் போன இருவரையும் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு மீனவ அமைப்புக்கள் கோரியுள்ளன.

அண்மையில் வடமராட்சி கடற்பரப்பில் தொழிலுக்கு சென்றிருந்த தொழிலாளர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவர் பின்னர் மீள கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

No comments