பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தபால் திணைக்கள ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவ்வகையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களது விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன இன்று (19) கடமைக்கு சமூகமளிக்காத அனைத்து ஊழியர்களும் பதவி விலகியதாக கருதப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில்,
அனைத்து தபால் நிலையங்களிலும் சேவைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது'
மேலும், 'தபால் நிலையங்களின் தபால் அதிபர்கள், பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும், அரச ஊழியர்கள் மற்றும் தபால் ஊழியர்களின் நிபந்தனைகள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு அவர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்' எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments :
Post a Comment