இலங்கை

சம்பந்தன், மாவை, சுமந்திரன், சிவிகே இரகசிய ஆலோசனை!

இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்கள் முல்லைத்தீவில் நேற்றிரவு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் முல்லைத்தீவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பமாக உள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.


மத்திய குழுக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கு அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மற்றும் தேசிய அரசாங்கம் உட்பட கொழும்பு அரசியலில் நிலவும் குழப்பநிலைமைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இனப்பிரச்சினை விவகாரம், புதிய அரசியலமைப்பு என்பன குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment