வடக்கு எல்லைக்கிராம ஆக்கிரமிப்பு:முழித்துக்கொண்ட கூட்டமைப்பு!
வடக்கின் எல்லைக்கிராமங்கள் முற்றாக பறிபோயுள்ள நிலையில் கூட்டமைப்பு இது தொடர்பாக ஆராயவுள்ளதாக ஊடகங்களிற்கு தகவல் வழங்கியுள்ளது.வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கே கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் தரவுகளுடன் மீண்டும் கூடி ஆராய்வதற்கும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
முன்னதாக வடமாகாணசபை எல்லைக்கிராமங்களில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆவண ரீதியாக வெளிப்படுத்தியிருந்தது.அத்துடன் கூட்டமைப்பின் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இவ்விடயத்தை சொல்வதாக நாடகம் அரங்கேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே நடப்பது ஏதும் தெரியாதென்ற பாணியில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடகமாடியுள்ளனர்.
Post a Comment