ஈபிடிபி தேவையா?இல்லையா?:டக்ளஸ் கேள்வி!
உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் உதவி கோரவில்லை என்று எம்.ஏ.சுமந்திரனும், மாவை சேனாதிராஜாவும் சொல்வது பொய்.அவ்வாறு தொடர்ந்து உண்மையினை திரிபுபடுத்தினால் அதன் பின்விளைவை சந்திக்கவேண்டுமென டக்ளஸ் எச்சரித்துள்ளார்.
ஆனாலும் பொது மேடையில் முகத்திற்கு முன்னால் அவர்கள் இருவரும் ஈ.பி.டி.பியிடம் உதவி கோரவில்லை என்று சொல்ல மாட்டார்கள் எனவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஈ.பி.டி.பி ஆதரவு வழங்கியதற்காக பேச்சுவார்த்தை நடாத்தவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா சொல்வது உண்மைக்கு புறம்பான விடயமாகும்.
அவர்கள் எங்களுடன் பேசியதற்கான ஆதரங்கள் ஒரு புறம் இருக்கையில், இருவரும் பொது மேடை ஒன்றில், எனது முகத்திற்கு முன்பாக வந்து இதனை சொல்ல மாட்டார்கள். இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா மட்டுமே உண்மையை சொல்லியுள்ளார்.
அதாவது இது தொடர்பில் பேசுவதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள என்னுடைய அறைக்கு தான் உட்பட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் வந்தமை பற்றி உண்மையினை சொன்னதாக டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
Post a Comment