கூட்டமைப்பு சார்பு வலிகிழக்கு பிரதேசசபை திலீபன் மற்றும் சிவகுமாரன் தூபிகளை இடிப்பதில் பங்கெடுத்த முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் சகிதம் நினைவேந்தலை நடத்தியுள்ளது.
யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகம் அமைக்கப்பட்டவுடன் முதலாவது நடவடிக்கையாக நல்லூரில் தியாகி திலீபன் பட்டினிப் போர் நடத்தி இடத்தில் அமைந்திருந்த நினைவு கல்லை அடித்து நொறுக்கிய இந்திய உளவுப் பிரிவின் முகவரான வரதராஜப்பெருமாள் மறுபுறம் தாயகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த களமிறக்கப்பட்டுள்ள மறவன்புலோ சச்சிதானந்தம் சகிதம் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தனித்து அமைதியாக தனது நினைவேந்தலை நடத்தியிருந்தது.
அக்கட்சியின் சர்வதேச அமைப்பாளர் வி.மணிவண்ணன்,உள்ளுராட்சி உறுப்பினர்களென பலரும் நினைவேந்தலில் பங்கெடுத்திருந்தனர்.
இதேவேளை ஈபிடிபி கட்சியும் நினைவேந்தலை தூபிப்பகுதியில் முன்னெடுத்திருந்தது.
0 கருத்துகள்:
Post a Comment