Header Ads

test

முல்லைத்தீவிலிருந்து தமிழ்களை வெளியேற்ற முனைப்பு - 80 ஆயிரம் ஏக்கா் காணி ஆக்கிரமிப்புமுல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தமிழ் மக்களை மிக விரைவில் வெளியேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக எடுக்கப்படும் நிலையில் இதுவரை சுமார் 80 ஆயிரம் ஏ க்கர் நிலம் அபகரிக்கப்பட்டிருக்கின்றது. மேற்கண்டவாறு வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார்.

வடமாகாணசபையி ன் 125வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி விடயத்தை கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

“2017.01.24ம்திகதி நிலைபெறுதகு அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜெயவிக்ரம் பெரேரா அவர்களினால் நந்திக்கடல் மற்றும் அத ஸ்ரீனைச் சூழவுள்ள பகுதிகளிலுமாக 4141.67 ஹெக்டயர் நிலம் மற்றும் நீர்ப்பரப்புக்களையும் நாயாறு மற்றும் அதனை ச்சூழவுள்ள பகுதிகளிலுமாக 4464.35 ஹெக்டயர் நிலம் மற்றும் நீர்ப்பரப்புக்களையும் 469ம் அத்தியாயமான தாவர விலங்கினப்பாதுகாப்புக் கட்டளைச்சட்டம் 2ம் பிரிவின் 01ம் உட்பிரிவின் கீழான கட்டளை என்ற தலைப்பினுள் வர்த்தமானி மூலம் நந்திக்கடல் இயற்கை ஒதுக்கிடம், நாயாறு இயற்கை ஒதுக்கிடம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்தம் 8606.02 ஹெக்டயர்கள் இதற்குள் அடங்குகின்றன. இந்த பகுதி களில் கிட்டத்தட்ட 9000 குடும்பங்களுக்கு மேல் தமது வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் தீர்க்கக்கூடிய வகையில் இந்நீர் நிலைகளை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள். பண்டைய காலந்தொட்டு ஒரு செழிப்பான இடமாகவும், மக்கள் இறால், மீன்கள் என வீச்சுவலைகள் மற்றும் நன்னீர் மீன்பிடி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட விடுவலைகள் மூலமாகவும் தொழில் செய்து தமது ஜீவனோபாயத்தை காக்கும் இடமாகக் காணப்படுகின்றது. இது தவிர இதனைச் சூழவுள்ள வயல் நிலங்கள் கூட இதனுள் அடங்குவதை அறிவிக்கப்பட்டுள்ள வரைபடம் காட்டி நிற்கின்றது முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல், மட்டுமல்லாமல் வற்றாப்பளை அருகாக அமைந்துள்ள வயல் நிலங்களும் இதற்குள் அடங்குவதனை அறிய முடிகிறது.

இதேபோல் நாயாற்றுப்பகுதி அநேகமாக இலங்கையிலேயே தூண்டில் தொழிலுக்கு பெயர் போன இடமாகும் அத்தோடு நந்திக்கடல் பற்றிக்குறிப்பிட்ட அதே தொழில் வாய்ப்புக்கள் உள்ள மிக நீண்ட நீர்ப்பரப்புடனான இடமாகும். இங்கும் வயல் நிலங்கள் சிறு பயிர் செய்கைக்கான இடங்களையும் உள்ளடக்கியே தமது கட்டுக்குள்  கொண்டு வருகின்றார்கள். முல்லைத்தீவு சகல வளங்களுமுள்ள ஒரு இடமாகும். இங்கு பல வடிவங்களில் அரசாங்கம் நில அபகரிப்புக்களை செய்து வருகின்றது.

மணலாறு குடியேற்றம், மகாவலி எல் வலய போர்வையில் திட் டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இராணுவம் ஆக்கிரமிப்புக்கள், பௌத்த பிக்குகளின் மதத் திணிப்புக்கள், தொல்பொருள் திணைக்களத்தின் காணி பறிப்புக்கள், வனவள துறையின் காணி பறிப்புக்கள், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் காணி பறிப்புக்கள், எனது கணிப்பின்படி முல்லைத்தீவில் மட்டும் சுமார் 80ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் நிலங்கள், நீர்நிலைகள் என அபகரிக்கப்பட்டுள்ளது. என அறியத்தருகின்றேன். இதுமக்கள் வாழும் இடமென்ற நிலைமாறி திட்டமிட்டு தமிழ் மக்களை வெளியேற்றுமிடமாக மாறி வருகின்றது. ஆட்சியாளர்களின் அபகரிப்பு சிந்தனை மாறி, நியாயமான நிலையில் ஆட்சி செய்யுங்கள் தமிழர்களை ஒதுக்கி விடும் நிலையை உங்களின் மனங்களிலிருந்து ஒதுக்கி விடுங்கள்.

இப்படியான திணிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை பின்னாளில் ஏற்படுத்தலாம் என எதிர்வு கூறுகின்றேன். சனநாயக நீரோட்டத்தில் எமது மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை எமக்குண்டு. உரிய இடங்களுக்கு இவற்றை கொண்டு சென்று தீர்வு பெற்றுத்தாருங்கள் என இச்சபையிலே எனது மக்களின் சார்பாளனாக கௌரவ முதலமைச்சர் கௌரவ அவைத்தலைவர் கௌரவ அமைச்சர்கள் கௌரவ உறுப்பினர்கள் அனைவரிடமும் வேண்டி நிற்கின்றேன்” - என்றார்.

No comments