Header Ads

test

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் இந்திய மத்திய அரசு கபட நாடகம்


ராஜீவ் காந்தி குடும்பத்தினரே மன்னிப்பு வழங்கியும் மத்திய அரசு கபட நாடகமாடி பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க மறுப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. 

இதற்கிடையே ராஜீவ் காந்தியின் மகனும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி நானும் எனது தங்கையும் ராஜீவ் காந்தியை கொன்றவர்களை மன்னித்துவிட்டதாக கூறி இருந்தார். 

இதனால் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமானது. ஆனால் மத்திய அரசு தொடர்து இதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் 27 ஆண்டுகளாக சிறையில் இருப்பது நியாயமல்ல. ராஜீவ் கொலை வழக்கை விசாரித்தவர்களே தவறை ஒப்புக் கொண்டுள்ளனர், ராஜீவ் காந்தி குடும்பத்தினரே மன்னிப்பும் வழங்கியுள்ளனர். ஆனால் மத்திய அரசு கபட நாடகமாடி பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க மறுக்கிறது என்றார்.

No comments