இலங்கை

13 ஆவது திருத்தம் தீர்வாகாது!

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் 13 ஆவது திருத்தம் எமக்கு ஒருபோதும் தீர்வாகாது என்பது உணர்த்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பா.டெனிஸ்வரன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனிஸ்வரனை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவி நீக்கியமை செல்லாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை தொடர்பில் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்றம் சுயாதீனமாகச் செயற்பட்டுத் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
13 ஆவது திருத்தம் ஊடாக அதிகாரப் பகிர்வு எந்தநிலையிலுள்ள என்பது இதன்மூலம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மாகாண முதலமைச்சருக்கு மாகாண அமைச்சரைக் கூட நீக்குவதற்கு அதிகாரமில்லாத நிலையே காணப்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment