Header Ads

test

இராணுவ பிடியிலிருந்த 120 ஏக்கர் காணிகள் விடுவிப்பு



வடக்கில் சிறிலங்கா இராணுவ வசமிருந்த 120.89  ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக, நேற்று அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்கா இராணுவத் தளபதியின் சார்பாக, கிளிநொச்சி படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் நிசங்க ரணவான, விடுவிக்கப்படும் காணிகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தார்.

ஜனாதிபதி அதனை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களிடம் அந்த ஆவணங்களை வழங்கினார்.

இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் வலி வடக்கில் தெல்லிப்பழைப் பிரதேசத்தில் 62.95 ஏக்கர் காணிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சிப் பிரதேசத்தில் 5.94 ஏக்கர் காணிகளும்,  முல்லைத்தீவு மாவட்டத்தில்  கரைத்துறைப்பற்று பிரதேசத்தில், 52 ஏக்கர் காணிகளும் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

No comments