Video Of Day

Breaking News

மல்லாகத்தில் மேலும் 06 இளைஞர்கள் கைது


யாழ். மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மேலும் 06 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 06 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மல்லாகம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அதன்படி இதுவரை 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

No comments