Header Ads

test

எரிபொருள் விநியோக பவுஸர் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்புக்கு முடிவு!


போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்துமாறு கோரி எரிபொருள் விநியோக தனியார் பவுஸர் உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். எரிபொருள் கட்டணம் அதிகரிக்கப்பட்டதனையடுத்து தமது போக்குவரத்துக் கட்டணத்தையும் அதிகரிக்குமாறு கோரி இதுவரை மூன்று வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதற்கு இதுவரையில் உரிய முறையில் பதில் கிடைக்காமையின் காரணமாகவே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக எரிபொருள் விநியோக தனியார் பவுஸர் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

No comments