Header Ads

test

போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை எனகிறார் ரோகித!


திருகோணமலை பிரட்றிக் வளாகத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண  டைவீரர்களை கௌரவிக்கும் நிகழ்வின் போது இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை படை வீரர்கள் எவ்வித யுத்த மீறல்களையும் மேற்கொள்ளவில்லை. நாட்டு நலனை கருத்திற்கொண்டு கொடூர யுத்தத்தை நிறைவு செய்ய உயிரை பொருட்படுத்தாது விட்டுக்கொடுத்தமை என்றுமே போற்றப்பட வேண்டும்.

யுத்த காலத்தின் போது தான் நான் வெளிவிவகார அமைச்சராக இருந்தேன். எனது காலப்பகுதியில் யுத்தம் நடைபெற்றது. அதே தருணம் இராணுவம் யுத்தக் குற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை முற்றாக மறுக்கிறேன் அக்காலப்பகுதியில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நன்கறிவேன் .எமது தாய் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்து யுத்தகாலத்தில் உயிரிழந்த படைவீரர்களை இந்த நேரத்தில் நினைவுகூறுகிறேன்.

அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.கிழக்கு மாகாணத்தில் உள்ள படை வீரர்களுக்காக இந்த அரசாங்கம் மூலம் வாழ்வாதார உதவிகள் உட்பட ஏனைய பொருளாதார வசதிகளையும் செய்துகொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் வீட்டுத் திட்டங்கள் போன்றனவும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச ரீதியாக படை வீரர்கள் எமது தாய் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர்களை இவ்வாறு கௌரவிக்கவேண்டும் நாட்டு நலன்களுக்காகவும் நாட்டை பாதுகாக்க ஒரே தேசம் ஒரே குரல் என்கின்றவாறு படைவீரர்கள் யுத்தகாலத்திலும் சரி தற்போதும் செயற்பட்டுவருகின்றனர்கள்.

தாய்நாட்டை பாதுகாத்த அனைத்து படைவீரர்களுக்கும் மீண்டும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.கடந்த அரசு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் தற்போதைய அரசாங்கம் மக்களிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி சம வாய்ப்புக்களுடனான அபிவிருத்தியை ஏற்படுத்த செயற்பட்டு வருகின்றது.

யுத்தத்தில் உயிர்களை இழந்த படை வீரர்களின் பிள்ளைகளி;ன் கல்வி நடவடிக்கைகளுக்கு தம்மால் முடியுமான உதவிகளினை வழங்குவதாவும் இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிததுள்ளார்.

No comments