Header Ads

test

தரமுயர்ந்த கொக்குத்தொடுவாய் பாடசாலை!


சிங்கள ஆக்கிரமிப்பிற்குள்ளாகியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற சாதாரண தர பரீட்சையில் 95 விழுக்காடு மாணவர்கள் சித்தியடைந்த இந்த பாடசாலை மாணவர்கள் தமது உயர் தரத்தை தொடர்வதாக்10 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் சென்றுவரவேண்டிய நிலை காணப்பட்டது.

இந்நிலையில்  இது வரை இந்தப்பாடசாலை எவராலும் கண்டுகொள்ளப்படாத காரணத்தினால் கொக்குத்தொடுவாய் கிராமத்தை சூழ உள்ள ஆறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். மாணவர்களின் எதிர்கால கற்றல் செயற்பாடுகளை கருத்தில் கொண்டு கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை 1சி தரத்திற்கு உயர்த்தப்பட்டு முதன் முதலாக அங்கு உயர்தர வகுப்புக்கள் இன்று வடமாகாண கல்வி அமைச்சினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கடந்த காலங்களில் பாடசாலையின் அடைவு மட்டத்தை தேசிய ரீதியிலும் மகாண,மாவட்ட,வலய ரீரியிலும் உயர்த்துவதற்காக சிறப்பாக செயற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனுடன் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments