Header Ads

test

வெசாக்கிற்கு வருபவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களே?


தமிழ் மக்களது திரட்சியை மாவீரர் நினைவேந்தலிலும் முள்ளிவாய்க்கால் நினைவுகூரலிலும் பார்க்க முடியும்.அதனை விடுத்து வேடிக்கை பார்க்கவரும் வெசாக் நிகழ்வில்லவென தெரிவித்துள்ளார் சமூக செயற்பாட்டாளரான வரதராசா பார்த்தீபன்.

இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி, சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தமது துருப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் கண்காட்சியில் கலந்துகொண்டமை பற்றி கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் இயக்கங்களை விட பல மடங்கு அதிகமான எண்ணிக்கையில் பொதுமக்கள் தங்களது வெசாக் நிகழ்விற்கு வருகை தந்திருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை இராணுவத்தளபதி, தமிழ் சினிமாவின் பார்வையாளர்களின் ஆர்வத்தை போல சர்கஸ் போன்ற நிகழ்வுக்காக திரள்போவது போலவே வெசாக்கிற்காக அணிதிரண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வெசாக் கண்காட்சி மற்றும் விழாக்களில் தமிழர்களின் ஆர்வத்தை ஆக்கிரமிப்பு சிங்கள இராணுவத்தை தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் தக்கவைத்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு அளவுகோலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

29 ஏப்ரல் அன்று யாழ்ப்பாண நகரில் சிங்கள இராணுவம் 'யாப்பா பட்டுன தம் அம்வாவை பெயரில் வெசாக் வலயம் ஒன்றை அமைத்திருந்தது.

தெற்கில் பௌத்த மகாநாயக்க தேரர்களின் அறிவுரையின் அடிப்படையில், மே மாதம் 01 ஆம் தேதி முதல் மே 07 வரை மே தினத்தை தள்ளிவைத்த விவாதமும் தொடர்கின்றது.

இந்த ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் வெசாக் கொண்டாட்டங்கள் காரணமாக, மே 01 அன்று பேரணிகளை நடாத்த வேண்டாம் என தெற்கு மாகாண மக்கள் இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்தியுள்ளனர். எனினும், வடகிழக்கில் ஈழத் தமிழர்கள் மே மாதம் 01 ம் திகதி வழக்கம் போல் மே தினத்தை அனுஸ்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments