இலங்கை

தீவக கடலில் காணாமல் போயுள்ள மீனவர்கள்!

யாழ்பபாணம், நாவாந்துறை வடக்குப் பகுதியைச் சேர்ந்த தோனிஸ் மல்கன் (வயது 44) செபமாலை அலெக்ஸ் மற்றும் ரூபன் ஆகியோரே காணாமற்போயுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


தீவகம் குறிகாட்டுவான் கடலுக்கு தொழிலுக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற படகு உரிமையாளர் மற்றும் அவருடன் வேலைபார்க்கும் இருவரும், இன்று ஞாயிற்றுக்கிழமை (27) காலை வரை வீடு திரும்பவில்லை. 

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தோனிஸ் மல்கன் தனது மனைவிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு நடுக்கடலில் திசை தெரியாது நிற்பதாகவும், இந்த தகவலை நயினாதீவு கடற்படையினருக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் தோனிஸ் மல்கனின் தொலைபேசி செயலிழந்து இருந்துள்ளது. இதன்பின்னர், தோனிஸ் மல்கனின் மனைவி இன்று ஞாயிற்றுக்கிழமை (27) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அவரது முறைப்பாட்டின் பிரகாரம், யாழ்ப்பாணம் பொலிஸார் கடற்படையின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment