இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை - மனோ கணேசன்

தமிழீழ விடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு மற்றும் அரசகரும மொழி அமைச்சர் மனோ கணேசன் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்...

போரில் உயிர் நீத்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகக் கூறிக் கொண்டு பயங்கரவாதிகளை நினைவு கூர்வதற்கும், மாவீரர் நிகழ்வுகளை நடத்துவதற்கும் எவரேனும் செயற்பட்டால் அதனை நான் எதிர்க்கின்றேன்.

அதேவேளை, கடந்த 30 ஆண்டு கால போரின் போது வடக்கிலும் தெற்கிலும் உயிரிழந்த சாதாரண பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எவரும் சவால் விடுக்க முடியாது.

போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை செய்வோர் அவர்களின் உறவினர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது தார்மீகமானதல்ல.

போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதாகக் கூறிக் கொண்டு சில இடங்களில் புலிகளுக்கு நினைவஞ்சலி நிகழ்வுகளை நடாத்த சிலர் முயற்சிப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ விடுதலைப் புலி கொள்கைகளை ஏற்றுக்கொண்டதில்லை என மனோ கணேசன் கூறியதாக சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment