புறப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி!


முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வல்வெட்டித்துறை சிவன் ஆலயத்தில் முன்பாக தீபச்சுடர் ஏற்றப்பட்டு ஆலடியிலுள்ள தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்; அவர்களின் இல்லதின் முன்பாக இருந்து மாபெரும் நினைவுச்சுடர் தாங்கிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி புறப்பட்டுள்ளது.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நான்காம் நாளான இன்று 15ம் திகதி முதல் வல்வெட்டித்துறை சிவன் ஆலயத்தில் முன்பாக தீபச்சுடர் ஏற்றப்பட்டு; நினைவுச் சுடர் தாங்கிய ஊர்திப் பவனி ஆரம்பிக்கபட்டுள்ளது.


இச்சுடர்ப் பவனியானது வல்வெட்டித்துறை சந்தியின் ஊடாக தொண்டைமனாறு பருத்தித்துறை நெல்லியடி யாழ் நகரைச் சென்றடைந்து தொடர்ச்;சியாக வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நினைவுச் சுடர் ஊர்தி பயணிக்கவுள்ளது. இறுதி நாள் மே 18ம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடையுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment