Header Ads

test

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்­கான போக்­கு­வ­ரத்து ஒழுங்கு!


முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கு வடக்­கின் 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்­தும் பேருந்­து­கள் செல்­ல­வுள்­ளன. பேருந்­து­கள் புறப்­ப­டும் இடம், செல்­லும் பாதை தொடர்­பில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­­னால் நேற்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணம் அனைத்­துப் பேருந்­து­க­ளும் காலை 7.30 மணி­ய­ள­வில் முள்­ளி­வாய்க்­கா­லுக் குப் புறப்­ப­டும். காரை­ந­க­ரில் இருந்து ஒரு பேருந்து சுழி­பு­ரம் ஊடாக சங்­கானை, சண்­டி­லிப்­பாய், மானிப்­பாய் வழியே முள்­ளி­வாய்க்­கால் செல்­லும். கட்­டக்­காட்­டில் இருந்து (வட­ம­ராட்சி கிழக்கு) மரு­தங்­கேணி ஊடாக ஒரு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் செல்­லும். அச்­சு­வேலி பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து பேருந்து புறப்­பட்டு கோப்­பாய் கைதடி வீதி வழியே முள்­ளி­வாய்க்­கால் சென்­ற­டை­யும். தொண்­ட­ம­னா­றுச் சந்­தி­யி­லி­ருந்து ஒரு பேருந்து புறப்­பட்டு வல்­வெட்­டித்­துறை, பருத்­தித்­துறை, நெல்­லி­யடி ஊடா­கப் புதுக்­காடு சென்று முள்­ளி­வாய்க்­கால் சென்­ற­டை­யும். யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­தி­லி­ருந்து 2 பேருந்­து­கள் முள்­ளி­வாய்­காலை நோக்­கிப் புறப்­ப­டும். வவு­னியாசெட்­டி­கு­ளம் பிர­தேச சபை முன்­னால் இருந்து காலை 8.30 மணிக்கு ஒரு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும். வவு­னியா பேருந்து நிலை­யத்­தில் இருந்து மூன்று பேருந்­து­கள் காலை 8.30 மணிக்கு முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும். மன்­னார்அடம்­ப­னி­லி­ருந்து காலை 7 மணிக்கு முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் பேருந்து புறப்­ப­டும். தலை­மன்­னா­ரில் இருந்து பேருந்து காலை 7 மணிக்­குப் புறப்­பட்டு பேசாலை, தாழ்­வு­பாடு ஊடாக முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிச் செல்­லும். கீரி­யி­லி­ருந்து காலை 7 மணிக்­குப் புறப்­ப­டும் பேருந்து எழுத்­தூர் மன்­னார் வழி­யாக முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிச் செல்­லும். நானாட்­டான் சந்­தி­யி­லி­ருந்து காலை 7 மணிக்­குப் பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும். மடு­வி­லி­ருந்து காலை 7 மணிக்கு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும். கிளி­நொச்சிகிளி­நொச்சி டிப்போ சந்­தி­யி­லி­ருந்து இரண்டு பேருந்­து­கள் 9 மணிக்கு முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் பய­ணிக்­கும். கந்­த­சாமி கோயி­ல­டி­யி­லி­ருந்து 9 மணிக்கு ஒரு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும்.பரந்­தன் சந்­தி­யி­லி­ருந்து காலை 9 மணிக்கு ஒரு பேருந்து புறப்­ப­டும். முல்­லைத்­தீவுதேவி­பு­ரம் சந்­தி­யி­லி­ருந்து காலை 9 மணிக்கு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும். உடை­யார்­கட்டு சந்­தி­யி­லி­ருந்து காலை 9 மணிக்கு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும்.புதுக்­கு­டி­யி­ருப்பு சந்­தி­யி­லி­ருந்து காலை 9 மணிக்கு பேருந்­து­கள் இரண்டு முள்­ளி­வாய்க்­காலை நோக்­கிப் புறப்­ப­டும் விசு­வ­மடு சந்­தி­யி­லி­ருந்து காலை 9 மணிக்கு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும். துணுக்­காய் பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து காலை 8.30 மணிக்கு பேருந்து ஒன்று முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும் ஒட்­டு­சுட்­டான் சந்­தி­யி­லி­ருந்து காலை 9 மணிக்கு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும். கொக்­கி­ளா­யி­லி­ருந்து காலை 9 மணிக்கு பேருந்து முள்­ளி­வாய்க்­கால் நோக்­கிப் புறப்­ப­டும். முல்­லைத்­தீவு நக­ரி­லி­ருந்து இரண்டு பேருந்­து­கள் முள்­ளி­வாய்க்­கால் நோக்கி காலை 9 தொடக்­கம் மு.பகல் 11 மணி வரை தொடர்ச்­சி­யா­கப் பேருந்து சேவையை நடை­மு­றைப்­ப­டுத்­தும். அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் இருந்து வரும் மக்­கள் அவர்­கள் வந்த அதே பேருந்­தில் திரும்­பிச் செல்­ல­வேண்­டும். வேறு வாக­னங்­களை நாடா­மல் வந்த வாக­னத்­தையே அடை­யா­ளம் வைத்து பய­ணிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கின்­றோம் – என்று முத­ல­மைச்­சர் அனுப்பி வைத்­துள்ள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது

No comments