Video Of Day

Breaking News

முள்ளிவாய்க்காலிலே.. ந.கிருஷ்ணசிங்கம்

முள்ளிவாய்க்காலிலே முடிவடைந்ததோர் குடும்பத்தில் ஒருத்தியான, போராளி புவனம். புணர்வாழ்வுச் சிறைக்காலம் முடிவடைந்து, யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன் வீடுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். அவளைப் பொறுப்பெடுத்த கிழவரான, அவளின் தாத்தா முத்துச்சாமி அப்பு முதலில் இறங்கிக்கை கொடுத்து,  அவளுக்கு உதவவே.. பஸ்வண்டியிலிருந்து தன் செயற்கைக்காலை முன்வைத்தவள், கைகளின் ஊன்றுகோல்களின் தாங்குதிறனோடு தத்தளித்து இறங்கி, நடக்கமுயன்று   தாவித்தாவித் தாத்தாவின் பின்னால் போனாள்.

கிளிநொச்சி இறுதிச்சமரின்போது புவனம் தனதுவலதுகாலை  இழந்திருந்தாள். போராளிகளின் மருத்துவமனையில், சிச்சை  பெற்று எழுந்துகொண்டவள், விரைவில் உடல்தோறிய நிலை                   யில் முள்ளிவாய்க்கால் பெரும்சமரிலும் தன். ஊனக்காலோடு நின்று போர் புரிந்தபோது.. முதுகுத் தண்டுவடம் தாக்குண்டு போனதால் முள்ளிநிலத்தில் குவிந்த..  இறந்தஉடலங்களோடு                       புவனமும் ஒருத்தியாக மயங்கி விழுந்தவள்.. உயிர்பிழைத்ததுவும் கைதுசெய்யப்பட்டதுவும்.. கொடியோரால் வதைகள்பல பட்டு உடல்சிதையக்கிடந்து துடித்ததுவும், ஒருபெரும் கதை.

இறுதியில் புணர்வாழ்வென்ற போர்வைக்குள் மாங்குளம் அரச மையத்துள் அவள் சேர்க்கப்பட்டதுவும் ஒவ்வொருகணங்களும்  அங்கவள் போராடிவாழ்ந்த, இழிந்தழிந்த நாட்களைக் கடந்து,                          இன்று, விடுதலையென்றபெயரில் விடுவிக்கப்பட்டதுவும், யாழ். பெரியகடைப் பேருந்து நியைத்தில் வந்திறங்கி.. இன்று நடப்பதுவும் அவளின் இன்னுமொரு புதினத்தின் தொடக்கமாகும்.

அது ஒரு பிற்பகற்பொழுது. நெடிய காலங்களின்பின் புவனம் பெரியகடைப் பிரதேசத்தைப் பார்க்கின்றாள். என்ன சன நடமாட்டம். நூற்றுக் கணக்கில்.. ஒவ்வொரு கடை முன்னாலும்                       வீதிகளிலும் பிதுங்கிவடியும் மனிதக்கூட்டத்துக்கு இடையால் நொண்டிக்காலோடு.. நோவருத்தவே நடக்கும் புவனம் வயோ திபத்தால் நடைதழும்பும்  தன் தாத்தாவைக்கூட நெருங்கிப்                        போக முடியாதவளாய் பெரும் சிரமப்பட்டாள்.  கேக்கேஎஸ் வீதியிலுள்ள ஒழுங்கைகளில் ஒன்றான சிவன்கோவில் வீதி, ஒழுங்கைக்குள் இருந்த அவளின் வீட்டுக்கு அவர்களிருவரும்                      போகவேண்டும்.

«தாத்தா! என்ன கடைகடையாய் இவ்வளவு சனக்கூட்டம்..»

«அதுமோனே! இப்ப திருவிழாக்காலமல்லோ அப்டிபிடித்தான். ஏலாட்டி ஏதும் வாகனம் பிடிக்கட்டே..»

«வேணாம்தாத்தா! வீண்காசு உதிலைதானே.. நடப்பம்»

பேத்தியாரைத் தாங்கிப்பிடித்தபடி தாத்தாக்கிழவனார் தனது நடுங்கும் பாதங்களை நிதானமாகப் பதித்து.. நடந்தார்.

மோட்டார் சையிக்கில்களும், கார்களும் வான்களும், லொறிகளும் அந்தப்பிரதானவீதியின் ஒற்றைவழிப்பாதையால் ஓலங்கள் இட்டபடி ஒன்றன்பின் ஒன்று உராசுவதுபோல நகர்ந்தன.                  இத்தனைக்கும் இடையில் தாறுமாறாக மனிதர்கள், பல்வேறு  வாழ்கைத்தரச் சராசரி மனிதர்களுக்கு இடையே, சிறுவயதுச் சோடிகளும் இவர்களையெல்லாம் மிஞ்சுமளவுக்குப் பிச்சைக்                       காரர்களுமாக அந்த யாழ்நகரமையம் தத்தளித்தது.

இங்கேதான் அந்தச் சந்தையில், புவனத்தின் தந்தையாரும்  முன்பு, பழக்கடைவைத்து நடத்தியவர். பரமேசுவரன் பிரபலமான முதலாளி எனப்பேசப்பட்டவர், கொழும்புக்கு வாழைக்                    குலைகளை  லொறிகளில்..  அனுப்பிக்  கொண்டிருந்தவர். இப்பொழுது, அந்தக்கடையை.. ஒரு சிங்களவரவந்து, பிடித்துக்கொண்டு.. நடத்திவருகின்றார்.

பரமேஸ்வரன் முதலாளியுமில்லை, அவரின்மகனும், இளைய மகளும் மனைவியும் இல்லை. இறுதியுத்தத்தில் முள்ளிவாய்  காலில் வந்துவந்துபிழந்த எரிதழற் கொத்துக்குண்டுகள் அவர்              களையும் விழுங்கிவிட்டன. இன்று, ஆக.. அந்தக்குடும்பத்தில் உயிர்தப்பி இருப்பவர்கள்.. இந்தத் தாத்தாவும், அவரின்மனை வியான பாட்டியும், இந்தப்போராளி புவனமும் மட்டுத்தான்.

அவளின், செயற்கைக்;காற் பொருத்து உராய்வதால் இரத்தம்  எப்பொழுதும் அவளின் முழங்காலால்கசியும். வேதனையோடு வாழும் புவனம்படும் துன்பம் விபரிக்க முடியாதவை.  அந்த          ஆறாத புண்ணின்நோ இன்று மிகவும் அதிகரிக்கவே, அந்தப்  பெண்ணின் வெண்மையானசருமம், வேதனையால் இருண்டடு வியர்த்தது.. மிகவும் சோர்வோடு அவள் நகர்ந்தாள். விரத்தி                            மயமான மனத்தாக்கத்தால் வெளிப்பட்ட அவளின்மூச்சுக்கள் ஒவ்வொன்றும் அவளின் மார்வுக்கூட்டை அதிரவைத்து வெகு சூடாகவே வெளியேறின.. 

அந்தத்தெருவில் ஊர்ந்த அத்தனை சனங்களிலும் மாறுபட்ட  ஒரு மனிதப் பெண்ணாக.. இழந்தவர்களின் எண்ணற்ற குரல்களின் கோரஒலிகளும்.. குவிந்து மறைந்த மாகொடிய சம்பவங்களும்.. குருதிச்சிதலங்களும், அங்கஞ்சிதைந்த குஞ்சுக்  குழந்தைகளுமென நெஞ்சம்சுமக்கும் நெக்குருக்கும் அந்தக்  காட்சிகள் தோன்றி.., அவளின் மனத்தை ஒவ்வொரு கணங்களும் உசுப்பும் உணர்வுத் தணலோடு, வாழ்பவள் அவள்  இடிகளிலும் வலிய தொனிகளோடு.. வானத்தைக் கிழித்துக்                    கொட்டிய குண்டுமழையின் நெடியநெருப்பிலும்நின்று தாங்கி மோதிய தம்மவரின்நினைவுகளின் சுமைதாங்கியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தன் உருவத்தை பெருமையின் மகிழ்வோடு  அவள் நோக்கிக் கொண்டவளாக. நெடுங்காலங்கள் கடந்து, தான்ஓடியும் உலாவியுந்திரிந்த அந்தஒழுங்கைக்குள், அவள் திரும்பி நடந்தாள்!

அங்கேயிருந்த  தம்பிப்பிள்ளையின் கடையும் காணியும் இப்போது «சில்வா பாராக»  மாறியிருந்தது. ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியோடு.. அவள்..

“என்னதாத்தா இது எப்படி…”

“ஓம்பிள்ளை அது அப்பிடித்தான்! நீ நட.”.

விபரமாகப் பதிலளிக்கும் நிலையில் கிழவர் இல்லை!

அவளின்வீட்டிற்கு அருகாமையில் இருந்த வாசிகசாலையின்  முன்பாகத் திரண்டுநின்ற  இளைஞர்  கூட்டத்தையும், அவர்களின் மோட்டாற்  சையிக்கில்களையும் விலத்திக்.. கடந்து                     போகும்போது.. அவரில் ஒருவன் இந்த முத்துச்சாமித்  தாத்தாவை நிறுத்திவைத்துக் கதைக்க முயலவே, அவரோ நில்லாது நடந்தார்.

கோபங்கொண்ட அவனோ, முரட்டுத்தனம் மிகுந்த ஆங்காரத் தோடு..மேலும்மேலும் அவரை அழைத்தான். ஏற்கணவே அதிகமாகக் குடித்திருந்த அவனின் குரற்தொனி குழம்பி ஒலித்தது.

«எடே முத்துக்கிழவா! வா இப்பிடி. உன்னோடை ஒரு கதையிருக்கு. உன்ரை பேத்தி.. உவள் இயக்கப்பெட்டை.. சொத்தியாய்.. ஏனடா ஏன்..  அதுதான் நாங்கள் கதைக்கவேணும்.                   வா..வாடா இப்பிடி!»

கிழவனார் எதுவுமேபேசாது பேத்தியாரைப் பிடித்தபடி உன்னி நடக்கவே..

«என்னதாத்தா, இவன்கள் கேக்கிறான்கள்! நீங்கள் பேசாமல் வாறியள்,. நாலு கிழிப்புக் கிழிச்சு விடுங்;கோ!. அப்பத்தானே அடங்குவான்கள். எல்லாட்டி..»

வார்த்தைகளை முடிக்காது ஆக்ரோசத்தோடு.. மூச்செறிந்தவளாக புவனம் கோபத்தால் பொங்கவே..

«இவன்களோடை எங்களுக்கென்னகதை. அவன்கள்அப்பிடித்தான்.  இப்பவெல்லா இடத்திலையும்  இவன்கள் இப்பிடித்  திரியிறாங்கள். எல்லாரும் பண வசதியானவன்கள். அவன்களின்ரை அண்ணை அக்கா அவையிவை எண்டு... பலசனம்,  வெளிநாடுகளிலை இருந்து, காசு... அனுப்புதுகள்.. பின்னை     இவன்கள்  மோட்டைச் சயிக்கில்களோடை,  இப்பிடித்தான்  கூட்டங் கூட்டமாய்சேந்து சண்டித்தனம் விட்டுக்கொண்டு.., சுத்திறாங்கள்.  வாளுகளெண்டும்... கத்தி துவக்குகள் எண்டும்  கைவசம் வைச்சிருக்கிறாங்களாம். ஊற்சண்டையள்நடக்குது. சாதிகளுக்கிடையே... மோதல்கள்கூட நடக்குது, ஆரிட்டைச் சொல்லிறதுமோனே.. சொல்லிஎன்னவாகிறது ஒண்டுமில்லை»

எங்கும் கொடுமைகளையே கண்டுகண்டு மனவேகம்தணிந்து  போன கிழவனாருக்கு.., அன்றாட வாழ்வின் மந்த கதியான ஓட்டத்தில், சேற்றில்  நடப்பது போன்ற  அருவருப்பேயன்றி                பளிச்சிடும்படியான பிரகாசமான திட்டுக்கள் எதுவும்தெரியாத  காலக் குருடராகிவிட்டவருக்கு, அவர்கள் கூறும்வார்த்தைகள்  எதுவும் உறைக்கவில்லை.

கிழவனார் முணுமுணுத்தபடி முன்னால்நடக்கவே அடங்காக் கோபத்தோடைகத்திய அந்தக்கும்பல் கெட்டவார்த்தைகளை குழறிக் கொட்டியவாறு, சாதிப்பெயரைக்கூறி அவரைத்திட்டி                 அழைக்கவே.. புவனம் மிக்ககோபத்தோடு திரும்பிநோக்கவே,  அவர்கள வீசியெறிந்த  மதுப் போத்தல்கள்  ஒவ்வென்றாக வந்து அவளின் காலடிகளில்விழுந்து சிதறின! 

No comments