இந்திய, இலங்கை கூட்டு சதி: மீண்டும் முரண்பாடு!
இலங்கை மற்றும் இந்திய அரசுகளது ஆசீர்வாதத்துடன் மீண்டும் தமிழ் முஸ்லீம் கலவரங்களை தூண்டிவிட சதிகள் அரங்கேறத்தொடங்கியுள்ளது.
தமிழர் தேசம் மத சார்பற்றதாக இருக்க வேண்டும். மத சார்பின்மை என்பது மதங்களை மதிக்காத தன்மை அல்ல. மதங்களை சமனாக மதிக்கிற தன்மை.
ஆனால் மத பாகுபாடுகள் எதுவும் அற்று நடந்து கொண்டிருக்கும் எமது தேசிய அரசியலை மத சாயம் பூசி நலிவிழக்க செய்யும் நடவடிக்கைகள் பலவழிகளில் நடக்கின்றது.
முஸ்லிம்- தமிழ் மக்களை மோத விட்டு, அங்கு தமிழர்களுக்கு துணையாக பொது பல சேனா நுழைவது , மனிதவதை நடக்கும் போது அதற்கு ஓடி ஓடி ஆதரவு கொடுத்துவிட்டு, தற்போது மிருகங்களின் மேல் அதீத பாசம் பொங்கி , மனிதாபிமானம் நிறைந்து வழிய , பௌத்த பிக்குகள் சைவ சமய சபைகளோடு கைகோர்த்து நிற்பது போன்ற ஆபத்தான அணுகுமுறைகள் எமது மண்ணில் நாசூக்காக அரங்க்கேற்றப்படுகிறது.
ஆயுதபோர் முடிவுக்கு வந்த காலம் முதல் , தமிழர்களிடையே உள்ளக பிளவுகளை தூண்டிவிடும் நடவடிக்கைகள் மிக தீவிரம் பெற்றிருந்தன.
பிரச்சினைகளை ஊதிப்பெருப்பித்து , எண்ணெய் ஊற்றி எரிய விட்டு, பூதாகாரமாக்கி, அவைதான் எம் மைய பிரச்சினை என எம்மையே நம்பவைக்கும் வழமையான “அதிகாரத்தரப்பு” அணுகுமுறைகள் மிக கனகச்சிதமாக நடைபெற்றுவருகிறது.
இப்பிரச்சினைகளை ஊதி பெருப்பிக்க கடுமையாக பல தரப்புக்களும் இயங்கிவருகிறன.
சட்டவிரோத மாட்டிறைச்சி கொல்களத்திற்கும் சட்டத்துக்கு மீறி அதிக தொகையில் பசுக்களையும் காளைகளையும் இறைச்சிக்காக வெட்ட அனுமதி கொடுத்த சாவகச்சேரி நகரசபை ஆளும் தரப்புக்கு எதிராக எடுக்கப்ப்டவேண்டிய அதிகார துஸ்பிரயோக நடவடிக்கையாகும். இன்று இவ்விடயம் ஒரு சமயத்துக்கு மட்டுப்பட்ட பிரச்சினையாக குறுக்கப்பட்டு, அதற்குள் பிக்குமாரையும் ஆதரவுக்கு இழுத்து வந்துள்ளனர்.
தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினருமாகிய மறவன்புலவு சச்சிதானந்ததின் தலைமையில் நடந்தேறும் இந்த அசிங்கங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
ஒருவர் மாட்டு இறைச்சியோ பசு இறைச்சியோ சாப்பிடுவது அவரது விருப்பம். அது நல்லது என பிரசாரம் செய்வது அவரது உரிமை. அது போல மாட்டு இறைச்சியோ பசு இறைச்சியோ சாப்பிடாமல் விடுவது இன்னொருவர் உரிமை . அதை சாப்பிட வேண்டாம் என பிரசாரம் செய்வதும் அவரது உரிமை. ஆனால் இது சைவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் உரிய நாடு.இங்கு எதற்கு மாட்டிறைச்சி கடை என்று கிளம்புபவர்களுக்கு ஆரம்பத்திலேயே தடைபோடவேண்டும்.
தமிழ் மக்கள் அரசியலிலோ போராட்டத்திலோ ஒரு போதும் மதத்தை , சாதியை, இனத்தை, பிரதேசத்தை முன்னிறுத்தாததவர்கள். அப்படி முன்னிறுத்துபவர்களை நிராகரிக்கவேண்டும்.
அது போல , “பௌத்தரும் சைவர்களும் வாழும் நாட்டில் மாட்டு இறைச்சி கடை எதற்கு” என கிளம்பி இருக்கும் திட்டமிட்ட கூத்தாடிகளை அடியோடு ஒதுக்கிவைக்கவேண்டும்.
இதேபோன்று முஸ்லீம்கள் தரப்பிலும்; முஸ்லீம் அடிப்படைவாதிகள் சிலரால் நேற்று வினோத ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் தமிழரால் நிர்மாணிக்கப்படும் உணவு விடுதியை தடுத்து நிறுத்துமாறும்.குறித்த முஸ்லீம் ஊரில் தமிழர் வியாபாரம் செய்யக்கூடாது என்ற கிரமமக்களின் கட்டளையை மதிக்காமல் குறித்த உணவகத்துக்கு அனுமதி வழங்கிய மாநகர சபை முதல்வருக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டிருந்தன.
யாழ் சோனக தெருவில் உள்ள தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்துவதுடன் தமிழரால் அங்கு சகல அனுமதியும் பெற்று நிர்மாணிக்கப்படும் உணவத்துக்கு எதிராக இனவாத கூட்டாளிகளுடன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தமிழர் வட்டாரங்களில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களென தெரியவருகின்றது.
Post a Comment