இலங்கை

வாய் பேச முடியாதவர் தொடருந்துடன் மோதிப் பலி!

மட்டக்களப்பு, கூழாவடி பகுதியில் தொடருந்துடன் மோதியதில் வாய்பேசமுடியாத இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (05) காலை கூழாவடியில் தண்டவாளம் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த இருதயபுரத்தினை சேர்ந்த உதயன் ஜீவேந்திரன் என்னும் 27 வயதுடைய இளைஞரே உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞர் வாய்பேசமுடியாத காது கேற்காத நிலையில் தண்டவளம் ஊடாக சென்றவரே புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புகையிரதத்தில் மோதுண்டு உயிருக்கு போராடிய இளைஞனை நிலையில் புகையிரத நிலைய ஊழியர்கள் மீட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினாலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment