Header Ads

test

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை புறக்கணித்து மேதினம்!


இலங்கை அரசு பௌத்த மேலாதிக்கத்திற்கு அடிபணிந்து மேதினத்தை 7ம் திகதிக்கு ஒத்திவைக்க அதனை நிராகரித்து தமிழ் தரப்பு தனது மேதினத்தை முதலாம் திகதியே இன்று தமிழர் தாயகத்தில் முன்னெடுத்துள்ளது.


கூட்டமைப்பு

கூட்டமைப்பு கட்சியின் மேதின கூட்டம் நெல்லியடி மாலிசந்தி மைதானத்தில் நடைபெற்றிருந்து.நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பங்கெடுத்த நிகழ்வில் பெரும்பாலும் குவித்து வைக்கபட்டிருந்த கதிரைகள் ஆட்களற்று வெறுமையாகவே காணப்பட்டது.


வருகை தந்தவர்கள் அனைவரிற்கும் சிவப்பு மஞ்சள் சால்வை மற்றும் தொப்பி இலவசமாக வழங்கப்பட்டபோதும் ஆட்களிற்கு பஞ்சமே நிலவியது.பெருமெடுப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொதுமக்களிடையே பெரிதாக ஆர்வம் காணப்படவில்லை.

(புகைப்படம்:வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன்)

வழமையாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி நெல்லியடியில் மேதினத்தை முன்னெடுத்துவந்த போதும் இம்முறை அதனை கூட்டமைப்பு பிடித்துக்கொண்டது.


சிறிலங்கா இனப்படுகொலை விசேட அதிரடிப்படை பாதுகாப்பில் , தமிழீழ தேச விடுதலைப்பாடல்களை ஒலிக்க விட்டு மேதின ஊர்வலம் நடந்ததைமக்கள் வேடிக்கை பார்த்திருந்த அவலமும் நடந்தது.


முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது மேதினத்தை முத்திரைசந்தை கிட்டுபூங்கா பகுதியில் நடத்தியிருந்தது.குறிப்பிடத்தக்க அளவில் ஆட்கள் திரண்டிருந்ததுடன் கூடிய அளவில் இளம் சமூகத்தின் பிரசன்னம் காணப்பட்டது.






அக்கட்சியில் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தலைமையில் முக்கியஸ்தர்கள் பங்கெடுத்திருந்தனர்.



மாக்சிச லெனினிசக்கட்சி



மாக்சிச லெனினிசக்கட்சியின் மேதின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் புத்தூர் பகுதியில் இடம்பெற்றிருந்தது.கணிசமான அளவில் அதன் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.


யாழ்.பல்கலையில்



யாழ்.பல்கலையில் ஊழியர் சங்கம்,இலங்கை ஆசிரியர் சங்கம் என்பவை இணைந்து தமது மேதினப்பொதுக்கூட்டத்தை நடத்தியிருந்தன.



ஜேவிபி



தெற்கில் பௌத்த பீடங்களிற்கு அஞ்சி ஜேவிபி தனது கடையினை இம்முறை யாழில் விரித்திருந்தது.தெற்கிலிருந்து பேரூந்துகளில் தருவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தனது ஆதவாளர்கள் சகிதம் பேரணியொன்றையும் பொதுக்கூட்டமொன்றையும் யாழ்.நகரில் நடத்தி முடித்திருந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு தமிழ்தரப்பினை சேர்ந்தவர்கள் தவிர வேறு எவருமற்றதாக வெறும் இறக்குமதி சிங்களவர்கள் சகிதம் அதன் மேதினம் நடந்திருந்தது.

No comments