Header Ads

test

இது பௌத்த நாடு அல்ல என்ற ஜே.வி.பி.யின் கருத்து ஆபத்து- ராகுல தேரர்


இது சிங்கள நாடு அல்லவென பி.பி. சி. சேவைக்கு மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிம்மல் ரத்னாயக்க தெரிவித்துள்ளதாகவும், ஜே.வி.பி. கட்சி இந்த நாட்டில் இதுபோன்ற அறிவிப்புக்கள் ஊடாக என்ன செய்யப் போகிறது என கொட்டபிட்டிய ராகுல தேரர் கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று(03) நடைபெற்ற ஜாதிக நியோஜித சங்க சமுலுவ கூட்டத்தில் உரையாற்றுகையில் தேரர் இதனைக் கூறினார். ஜே.வி.பி. இதுபோன்ற அறிவிப்புக்களை செய்வது, இந்த நாட்டு பௌத்த மக்கள் அவர்களுக்கு வாக்க வில்லை என்பதற்காகவா? அல்லது பௌத்த மக்களின் ஆதரவினால் அவர்களுக்கு ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது எனக் கருதுவதனாலா? அல்லது வேறு யாருடையவாவது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவா? என்ற கேள்விகள் எமக்குள் எழுவதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

No comments