Header Ads

test

கட்டாயமாக சேவைக்கு சமுகமளிக்க வேண்டும்


பணிப்புறக்கணிப்பு காரணமாக தொடரூந்து சேவை தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய தொடரூந்து சேவையின் ஒப்பந்த மற்றும் மேலதிக பணியாளர்கள் கட்டாயமாக சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
எனினும், அதிகாரிகள் தொழிற்சங்கங்களை அடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வார்களாயின், அடையாள பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடரூந்து தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
 
இந்த நிலையில், பணிப்புறக்கணிப்பைக் கைவிட்டு பணிக்கு சமுகமளிக்குமாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடம் தாம் கோரிக்கை விடுப்பதாக தொடரூந்து முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்கிரம எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.
 
12 வீத வேதன உயர்வு, ஒரு நாளைக்கு எட்டு மணிநேர அடிப்படையில் வாரத்திற்கு 40 மணிநேர வேலை நேரம், 75 வீத ஊக்குவிப்பு கொடுப்பனவை நிரந்தரமாக்குதல் முதலான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முதல் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், நாளை பிற்பகல் நான்கு மணிவரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என தொடரூந்து தொழில்நுட்ப சேவை சங்கத்தின் தலைவர் சம்பத் ராஜித்த தெரிவித்துள்ளார்.

No comments