இலங்கை

நாட்டில் இராணுவ அடக்குமுறை ஆட்சியைக் கொண்டுவர சதி


நாட்டில் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவுடனும் மொட்டுத் தரப்பிலும் இணைந்திருக்கும் முன்னாள் படை வீரர்கள் இராணுவ அடக்குமுறை ஆட்சியொன்றை கொண்டுவர மறைமுகமான சதித்திட்டமொன்று வகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டினார். இதற்கு சில ஊடகங்கள் துணை போய்க் கொண்டிருப்பதாகவும், அவ்வாறு ஒரு நிலைமை வந்தால், ஊடகவியலாளர்களுக்கே அது பாதிப்பாக முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இவர்களின் பின்னால் நின்று இயங்கிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள், மீண்டும் ஊடகவியலாளர்கள் காணாமல் போகும் யுகத்தை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் எனவும் பிரதமர் எச்சரிக்கை விடுத்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று (23) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் பிரதமர் இவ்வாறு கூறினார்

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment