இலங்கை

அரசியலமைப்பு மறுசீரமைப்பு முழுமையாக இடம்பெற வேண்டும்


அரசியலமைப்பு மறுசீரமைப்பு முழுமையாக இடம்பெற வேண்டும் என அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டி நீர் வழங்கல் திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் கெட்டம்பேயில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தலைவர்களுக்கு தமது கட்சியின் உட்பூசல்களை தீர்ப்பதற்கே நேரம் போதாதுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment