இலங்கை

மன்னார் விடத்தல் தீவில் மன்னார் ஆயருக்கு வரவேற்பு

மன்னார் விடத்தல் தீவு புனித அடைக்கல அன்னை ஆலய அபிசேக விழாவும், புதிய ஆயரை வரவேற்கும் நிகழ்வும் நேற்று மாலை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அயர் பேரருட் கலாநிதி இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை பங்கு ரீதியாக வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆயரினால் குறித்த ஆலயம் திறந்து வைக்கப்பட்டு அபிசேகம் இடம் பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. குறித் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் கலந்துகொண்டார்.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment