இலங்கை

தெற்கை உலுக்கும் மர்ம காய்ச்சல்


தென் மாகாணத்தினுள் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார பிரிவுகள் அதிக கவனம் செலுத்தியுள்ளன.

விசேடமாக இனங்காண முடியாத இந்த காய்ச்சல், குழந்தைகள் இடையே அதிகமாக பரவி வருவதாக தெரியவந்துள்ளது.

தங்காலை, ஹம்பாந்தோட்டை மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களில் அதிகமாக இந்த காய்ச்சல் பரவியுள்ள நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதோடு, அவர்கள் தற்போது கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த தினங்களில் கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 5 குழந்தைகள் இந்த வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் நோயார்களை காண வருவோர் அதிக அவதானத்துடன் இருக்குமாறு கராபிட்டிய மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் அருணத சில்வா எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment