இந்தியா

மோடியை கொலை செய்ய திட்டமிட்டவருக்கு மாரடைப்பு


பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்ட தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டு லாரி உரிமையாளருடன் போனில் பேசியவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (53). அப்போது, இவர் பேசியது சமூக வலையதளங்களில் வைரலாகி வந்தது. இதன் காரணமாக, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்,சிறையில் இருந்த முகமது ரபீக்கிற்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரபீக், கோயம்புத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கூட ரபீக் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கோயம்புத்தூரில் கடந்த 1998ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இவர் தான் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment