Video Of Day

Breaking News

இலங்கையில் இராணுவ நோக்கங்கள் இல்லை! - சீனத் தூதுவர்


இலங்கையில் சீன நிதி வசதியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றி வதந்திகள் பரப்பப்படுவதாக சபாநாயகர் கருஜெயசூரிய இலங்கைக்கான சீன தூதுவர் செங் சூயுவானை சந்தித்த போது தெரிவித்தார். இருவரும் பொருளாதார உலகமயமாதல் மற்றும் சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் பற்றி கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். சீனா மற்றும் இலங்கை உட்பட முழு உலகிற்கும் பொருளாதார உலகமயமாதல் பயன் விளைவிக்கும் என சீனத் தூதுவர் தெரிவித்தார். இணைந்த கருத்துப் பரிமாற்றம் பங்கீடு மற்றும் பகிரப்பட்ட நன்மைகள் ஊடாக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒரு பாதை ஒரு மண்டலம் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும் என சீன தூதுவர் தெரிவித்தார். இலங்கையுடனான உறவை சீனா முக்கியமாகக் கருதுகிறது. இரு நாட்டு தலைவர்களும் ஒத்துக்கொண்டதற்கிணங்க ஒரு பாதை ஒரு மண்டலம் திட்டத்தின் மூலம் முதலீடுகளை சீனா மேற்கொள்ளும். கொழும்பு துறைமுகத்திட்டம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பூங்கா கொழும்புடன், ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டியை இணைத்தல் திட்டம் என்பன மிக வேகமாக வளர்ந்து வருவதாக சீனத் தூதுவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தில் ராணுவ தொடர்பு எனும் கருத்தை அவர் மறுத்துரைத்தார். சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் நல்லுறவை சீர்குலைக்கும் சில அந்நிய தீயசக்திகள் செயற்படுகின்றன. என சீனத் தூதுவர் தெரிவித்தார்.
இலங்கை சபாநாயகர் கருஜெயசூரிய இதன்போது சீனாவிற்கு இலங்கை சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சமூகத்தின் அனைத்து தரப்பும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஒரு வர்த்தக திட்டம் என்பதை அறியும். இலகையில் சீனா மேற்கொள்ளும் மெகா திட்டங்களுக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. இலங்கை பாராளுமன்றம் அதன் சக்திக்குட்பட்ட வகையில் இத்திட்டங்களுக்கு உதவும் என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்தார்.

No comments