Video Of Day

Breaking News

மின்னல் தாக்கி 7 பேர் பலி!


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால், மின்னல் தாக்கி ஏழு பேர் பலியாகியுள்ளனர்.

 2194 குடும்பங்களைச் சேர்ந்த 8690 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களை விட்டு தற்காலிகமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

 திருகோணமலை, பொலன்னறுவை, பதுளை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளிலேயே மின்னல் தாக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments