இலங்கை

ஜப்பானில் ஏதிலி அந்தஸ்த்து கோரும் முதல் 5 நாட்டவர்களின் பட்டியலில் இலங்கையர்கள்


ஜப்பானில் ஏதிலி அந்தஸ்த்து கோரும் முதல் 5 நாட்டவர்களின் பட்டியலில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஜப்பானில் ஏதிலி அந்தஸ்த்து கோரியோரில் 70 சதவீதமானவர்கள் இலங்கை, ஃபிலிப்பைன்ஸ், வியட்நாம், நேபாளம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

ஜப்பான் டைம்ஸ் என்ற ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 629 பேர் ஏதிலி விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்த போதும், அவர்களில் 20 பேருக்கு மாத்திரமே ஏதிலி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஏதிலிகள் பொருளாதார நோக்கில் ஜப்பான் சென்றவர்கள் என்பதால் பலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

About சாதனா

0 கருத்துகள்:

Post a Comment