Header Ads

test

25 முதல் தொடர் புறக்கணிப்பு?


வடமாகாண ஆளுநருடான பேச்சுவார்த்தையின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, தமக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாத பட்சத்தில் எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னர் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரச மருத்து அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளார் கலாநிதி தங்கராஜா காண்டீபன் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவித்ததாவது
புதிய சுற்று நிரூபத்தின் பிரகாரம் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாததன் காரணத்தினால் கடந்த திங்கட்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் அரச மருத்துவ அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டது.
அரச சுகாதார துறையினரின் கவனயீனம் காரணமாகவே தமது மேலதிக கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் குற்றம் சுமத்தின. 
எனினும் அரச மருத்துவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்று நிரூபத்திற்கான கொடுப்பனவுகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை செய்யவில்லை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ் திருவாகரன் தெரிவித்தார்.
இந்தநிலையில், வடக்கு மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே காண்டீபன் இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments