Header Ads

test

இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோ மீற்றரால் அதிகரிப்பு!

இலங்கைத் தீவின் புதிய வரைபடம் இன்றைய தினம் (31.05.2018) வெளியிடப்படவுள்ளது. அரச நில அளவையாளர் திணைக்களம் வரைந்துள்ள வரைபடமே இவ்வாறு வெளியிடப்படவுள்ளது.

கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரத்தை உள்ளடக்கியதினால் இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோமீற்றரினால் அதிகரித்துள்ளதாக நில அளவை ஆணையாளர் பி.எம்.பி.உதயகாந்த தெரிவித்துள்ளார்.

இதேபோன்று மொரஹாகந்த உள்ளிட்ட நீர்பாசனங்கள் பல இந்த வரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.



No comments