Video Of Day

Breaking News

காணாமற் போன முன்னால் போராளியின் 16 வயது மகனை காணவில்லை! மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு


முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் – சிவநகரினை சேர்ந்த 16 வயதுடைய மாணவனை காணவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அருமைதாஸ் மதுசன் என்ற மாணவன் முல்லைத்தீவு பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு கடந்த 27 ஆம் திகதி சென்று இரண்டு வாரங்களாக வீடு திரும்பாத நிலையில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் போராளியான குறித்த மாணவனின் தந்தை காணாமல் போனதை அடுத்து தாய் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவரது தந்தை தொடர்பில் மகனிடம் விசாரணை செய்து வந்துள்ளார்கள் எனவும், ஆனால் மகன் சிலாவத்தையில் உள்ள உறவினர்களின் வீட்டிற்கு செல்வதாக சென்றவன். தற்போது காணவில்லை என தாயார் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த விடையம் தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனிடம் முறையிட்டுள்ளதை தொடர்ந்து வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபடு பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

No comments