Header Ads

test

சிறீதர் திரையரங்கை விடுவிக்க போராடும் சயந்தன்!


சாவகச்சேரி நகரசபையினை கைப்பற்ற சிறீதரர் திரையரங்கிடம் சரணாகதி அடைந்த வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தற்போது அதே சிறீதர் திரையரங்கை மீட்க நீதிமன்ற படியேறியுள்ளார்.


1995ம் ஆண்டு முதல் ஈபிடிபியால் பலாத்காரமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிறீதர் திரையரங்கை விடுவிக்க கோரி அதன் உரிமையாளர்கள் போராடிவருகின்றனர்.அவர்களுள் ஒருவரான இரட்ணசபாபதி சிறீதரர் உள்ளிட்ட அறுவர் சார்பில் மனுவை யாழ்.மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள சட்டத்தரணி கேசவன் சயந்தன் 10 கோடி நட்டஈடும் கோரியுள்ளார்.


தற்போது ஈபிடிபி வசமிருக்கின்ற சிறீதர் திரையரங்கை விடுவிக்க கோரி அதன் உரிமையாளர்கள் போராடிவருகின்றனர்.எனினும் ஈபிடிபி கட்சியோ அதனை தனது தலைமைக்காரியாலயமாக பயன்படுத்திவருவதுடன் டக்ளஸ் தேவானந்தா அங்கேயே தங்கியுமிருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments