அவுஸ்திரேலிய ஏதிலிகள் அச்சத்துடனான மனநிலையில்
அதன் சிரேஷ்ட உறுப்பினர் இந்திரிக்கா ரத்வத்த இதனைத் தெரிவித்துள்ளார்.
தமது 25 வருட பணிக்காலத்தில், பசுபிக் தீவுகளான நவுறு மட்டும் மானஸ் தீவுகளில் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமையைப் போன்று மோசமான நிலைமையை தாம் பார்த்ததில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலமாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிக்கிறது.
இந்த இடங்களில் சுமார் 3000க்கும் அதிகமான இலங்கை, ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளின் ஆண்கள், பெண்கள், சிறார்கள் தடுப்பில் இருக்கின்றனர்.
அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்
Post a Comment