Header Ads

test

ஐரோப்பிய நாடாளுமன்ற உயர் மட்ட பிரதிநிதிகள் குழு நாளை இலங்கை விஜயம்


ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் மட்ட பிரதிநிதிகள் கொண்ட குழுவொன்று நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான குழுவின் உறுப்பினர்களும் அதில் உள்ளடங்குவதுடன், தெற்காசியா தொடர்பான விசேட பிரதிநிதிகளும் அதில் அடங்குவதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய சங்க பிரதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 6 ஆம் திகதி வரையில் அவர்கள் இலங்கையில் தங்கியிருப்பர்.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் எனப்படும், முன்னுரிமை வழங்கலின் பொதுமைப்படுத்தப்பட்ட முறைமை வரிச்சலுகை வழங்கப்பட்டதன் பின்னரான முதலாவது கணிப்பீட்டை மேற்கொள்வதற்காக இந்த குழு இலங்கை வருகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் மீள வழங்கப்பட்ட இந்த வரிச்சலுகையின் பொருட்டு, இலங்கை அரசாங்கம் உறுதியளித்த விடயங்களின் அமுலாக்கம் குறித்து இந்த குழு ஆய்வு நடத்தவுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் அந்த குழு விரிவாக ஆராயப்படவுள்ளதகாவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்த வருட இறுதியில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உடன்பாடுகள் தொடர்பிலான முடிவுகளை எடுப்பதற்காக, அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

No comments