Header Ads

test

ரணிலுக்கு ஆதரவா? – கூட்டமைப்பின் முடிவு இன்று


சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று முடிவெடுக்கவுள்ளது. இன்று காலை கூட்டமைப்பு இதுபற்றி முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் என கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை, இன்று பிற்பகல் நடக்கவுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். “ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக இன்னமும் எமது கட்சி முடிவெதையும் எடுக்கவில்லை. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறும். இதில் எமது நிலைப்பாடு என்னவென்று முடிவு செய்யப்படும். கூட்டமைப்பில் உள்ள சில கட்சிகள், வேறுவேறு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. ஈபிஆர்எல்எவ்வின் ஒரு உறுப்பினர், கூட்டமைப்பில் இருந்து விலகி, சுதந்திரமாகவே வாக்களிப்பார். எனினும், ஏனைய 15 உறுப்பினர்களும்,இன்றைய கூட்டத்தில் ஒரே நிலைப்பாட்டை எடுப்பார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

No comments