மல்லாவி பகுதியில் நேற்று (26) மாலை வீசிய கடும் காற்றினால் நகர்பகுதியில் உள்ள 6 கடைகள் சேதமடைந்துள்ளது.
நேற்று மாலை 4.30 மணியளவில் மல்லாவி நகர்பகுதியில் கடும் காற்றுடன் மழைபெய்துள்ளது
இதனால் மல்லாவி நகர்பகுதியில் பாரிய நெல் ஆலை ஒன்று முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த நெல் பைகளும் மழையினால் நனைந்துள்ளது.
நகரதில் உள்ள 5 கடைகளின் கூரைகள் காற்றினால் தூக்கிவீசப்பட்டுள்ளன. இதேவேளை மல்லாவி பகுதியினை சேர்ந்த விவசாயிகளிலின் வாழை மரங்கள் மற்றும் மரவள்ளி மரங்கள் என்பன காற்றினால் அடித்து சாய்க்கப்பட்டுள்ளது.
வீசிய காற்றினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கிராம அலுவலகரிடம் முறையிட்டுள்ளதுடன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 கருத்துகள்:
Post a Comment