சிவாஜி,ரவிகரன், இளஞ்செழியன்,சண்முகம் மீதான வழக்கு ஒத்தி வைப்பு
கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வட்டுவாகல் கடற்படை முகாம் காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில், அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு முல்லைத்த்தீவுப் பொலிஸாரால் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்,து.ரவிகரன் முன்னாள் வடமாமாகாண சபை பிரதி அவைத்தலைவர் ம. அன்ரனி ஜெயநாதன் மகனும் சமூக செயட்பாட்டாலரும் ஆகிய இளச்செழியன், முள்ளிவாய்க்கால் கிழக்கு(வட்டுவாகல்) கிராமத்தின் தலைவர் சண்முகம் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நீதிபதி எஸ்.லெனின்குமார் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது நால்வரும் முன்னிலையாகினர். அதன் போது 7 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனைய மூவரையும் கைது செய்ய பொலிஸார் நீதிமன்றில் கால அவகாசம் கோரினர். அதனையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுலை மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Post a Comment