Header Ads

test

யாழில் சுயாதீன ஊடகவியலாளரிடம் விசாரணை!


சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்டதாக ஊடகவியலாளரிடம் இணையத்தள குற்றவியல் விசாரணைக்குழுவினர் இன்று புதன்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.விசாரணையின் தொடர்ச்சியாக அவரது மடிக்கணனி மேலதிக விசாரணைகளிற்கென எடுத்துச்செல்லப்பட்டதுடன் அவரை நாளை யாழ்.காவல்நிலையத்தில் சமூகமளிக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அந்தரங்க உறவு பற்றிய அறிக்கையிடப்பட்டதனை தொடர்ந்தே குறித்த சுயாதீன ஊடகவியலாளர் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீனமாக கடமையாற்றும் ஊடகவியலாளரிடமே இணையத்தள குற்றவியல் விசாரணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இணையத்தளம் ஒன்றில் இராஜாங்க அமைச்சர் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிடப்பட்டதாக, இராஜாங்க அமைச்சர் இணையளத்தள குற்றவியல் காவல்துறைக்கு முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், இன்று யாழ்ப்பாணம் வருகை தந்த இணையத்தள குற்றவியல் தொடர்பான விசாரணைக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments