கேப்பாபிலவு படைமுகாம் வாயிலுக்கு அண்மையில் உள்ள தேக்கங்காட்டுப் பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத் தீ பரவியது. இதில் சுமார் 45 ஏக்கர் தேக்கங்காடு எரிந்திருக்கக் கூடும் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். தீ பரவியதையடுத்து 59 ஆவது படைப்பிரிவினர் தண்ணீர் விசிறி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கேப்பாபுலவு பகுதியில் 420 ஆவது நாளாக நில மீட்புப் போராட்டம் நடத்தும் மக்கள் அமைத்துள்ள போராட்ட கொட்டகையில் இருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள வனவள பாதுகாப்பு பிரிவுக்குச் சொந்தமான தேக்கங் காடுகளே தீ பற்றின
Post a Comment