நெடுந்தீவு பிரதேச சபையை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. புதிய தவிசாளராகக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பிலிப்பு பற்றிக் றொஷான் 7 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட நல்லதம்பி சசிக்குமார் 6 வாக்குகளைப் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் பதவியிழந்தார். போட்டியின்றி உப தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சண்முகம் லோகேஷ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.
Post a Comment