தமிழகத்தில் வன்முறைகளை ஏற்படுத்த இலங்கை ஊடாக முயற்சி
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் வன்முறைகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைதாகியிருந்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அந்த குழுவினர் இலங்கையில் இருந்து நாட்டுத் துப்பாக்கிகளை பெற்றுக் கொள்வதற்கு, மண்டபம் ஏதிலிகள் முகாமில் உள்ள இலங்கை ஏதிலி ஒருவரை அணுகியுள்ளமை தெரியவந்துள்ளது.
கடவுளை இழிவுப்படுத்துகின்றவர்களை கொலை செய்யும் நோக்கில் இந்த குழு செயற்பட்டுள்ளது.
மேலும் இந்த குழு, வட்சாப் சமுக வலைத்தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தகுழுவைச் சேர்ந்த மற்றுமொருவர் நேற்று கைதாகியுள்ளதாகவும், மேலும் 8 பேர் வரையில் தேடப்பட்டு வருவதாகவும் தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்
Post a Comment